மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவு பகுதியில் உள்ள 50 வீட்டு திட்டத்தில் வீடு ஒன்று தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இரு குழுவினர் மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியதையடுத்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நாகநாதன் நவநீதனின் வீடு இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதை அடுத்து வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பெண்கள் உள்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.