மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்காமல் அமைதியாக இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் காண கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்யோகஸ்தர்கள் முக்கிய முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பனிப்போர் முடிவுக்கு வரும். நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று நடக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதையும் எதிர்க்கும் வல்லமை பிறக்கும். உத்யோகஸ்தர்கள் பொறுமை காப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்று இழப்புகளை கொடுக்கும் என்பதால் பேச்சில் இனிமை தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்க கூடிய இனிய நாளாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய சூழ்நிலை உண்டு.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத நாளாக இருக்கும். வெளியிட பயணங்களின் மூலம் புதிய நட்பு உருவாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற இடங்களில் உங்கள் கருத்துக்களை முன் வைக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் புரிபவர்கள் தேவையற்ற இடங்களில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பல வகைகளில் இருந்தும் விமர்சனங்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை மட்டம் தட்டினாலும் எதையும் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி உறவில் புரிதல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களுடன் நட்புறவாடுவார்கள். வாகன ரீதியான பயணங்களில் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஆன்மீக ரீதியான சிந்தனை மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் வந்து மறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்பீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் விருத்தி காண்பீர்கள். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஓயும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்கள் மறைமுக எதிரிகளை இனம் கண்டு கொள்வார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆடம்பரத்தை தவிர்ப்பது உத்தமம்.