மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. சுய தொழிலில் லாபம் காணலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் உதவி புரிவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும். தொலை தூர இடங்களிலிருந்து எதிர்பாராத செய்தி ஒன்று காத்திருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சங்கடங்கள் தீரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கடன் தொகை குறையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகத்தை குறைத்து விதமாக செயல்படுவது நல்லது. சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். வியாபாரிகள் நாணயமாக செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பொருளாதாரம் மேம்படும். ஆரோக்கியம் கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டியதாக இருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் பெறுவதில் தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் வழங்கப்படும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்புடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெற்றோர்களுடைய ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்கும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க கடின உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லைகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும். குடும்பத்தின் பொறுப்பு சுமையை ஏற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். நீண்டநாள் நடக்குமா? என்று நினைத்த ஒரு விஷயம் நடக்க இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடன் பேசும் பொழுது கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நினைத்த ஒரு விஷயம் நடைபெற இருக்கிறது. தேவையற்ற பயத்தை தள்ளி வைத்து செயல்படுவது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி நிலவ கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த சண்டைகள் தீர்ந்து சுமூகமாக செயல்படுவீர்கள். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைத்தது இடையூறுகள் ஏற்படலாம். கடின உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். சுயதொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உங்களுடைய நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும்.