ஜனவரி 03ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ள து. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் தேவையான மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்து ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் சுத்திகரிப்பு நிலையத்தை மீள ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலயில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் பெற்றோல் தேவையில் 14 வீதத்தையும் டீசல் தேவையில் 29 வீதத்தையும் மட்டுமே வழங்குகிறது. எனவே, சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதால் நாட்டில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளது