மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் அறிமுகம் பயனுள்ளதாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சிந்தனைகள் மனதில் உதிக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்னோன்யம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சேமிப்பின் மீது அதிக நாட்டம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திட்டமிட்டபடி திட்டமிட்ட செயல்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்க இருக்கிறது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் தன லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்திற்கு ஈடுபட்டுள்ளவர்கள் மேலதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் துணிச்சலாக செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கக் கூடியதாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றி இருக்கும் எதிரிகளின் தொல்லைகள் அடங்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத ஒரு விஷயம் நடக்க இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் காணலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்குதாரர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது உத்தமம். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத சுபச் செய்திகள் கிடைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சக நண்பர்கள் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய பாதை திறக்கும் நாளாக இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பெயர் கிடைக்கக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும்.