யாழ்.கோண்டாவில் – உப்புமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளதில் வீட்டின் கண்ணாடி உட்பட பலபொருட்கள் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டது.
மேலும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குவைத்து வைத்து அடித்து நொருக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்