பார்ன் சுவாலோ (Barn Swallow ) இது ஆர்ஜென்டினா நாட்டிலே வாழும் ஒரு அதிசய பறவையினம் , ஐந்தறிவு ஜீவனான சின்னஞ்சிறு பறவையினம் தான் ஆனால் , இதனிடம் மனிதர்களாகிய நாம் படிக்க வேண்டிய பாடம் ஏராளம்.
தன்னம்பிக்கை , தைரியம் , முயற்சி , சாமர்த்தியம் என்று பல தகைமைகளை தன்னகத்தே கொண்ட இக்குருவி (Barn Swallow ) , மனித படைப்பிற்கான இறைவனின் இன்னொரு பாடமாகும். இச் சிறுய குருவியானது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் ஆர்ஜென்டினாவிலிருந்து கலிபோர்னியா புறப்படுகிறது. ஆர்ஜென்டினாவிலிருந்து சுமார் 8300 கிலோமீட்டர் தூரம் உள்ளது கலிபோர்னியா.
மார்ச் மாதம் கலிபோர்னியா எல்லையை அடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு மீண்டும் ஒக்டோபரில் புறப்பட்டு , 8300 கிலோமீட்டர் பறந்து அர்ஜென்டினாவுக்கு வருகிறது.
ஆக , இக்குருவி (Barn Swallow ) இனப்பெருக்கத்திற்காக பறக்கும் மொத்த தூரம் 16600 கிலோமீட்டர் ஆகும். இதிலே இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா ? பார்ன் சுவாலோ குருவியானது பறப்பது நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது.கடற்பரப்பின் மேல்தான் இத்தனை தூரத்தை கடந்து அது பறக்கிறது.
இதுதான் ஏனைய பறவைகளுக்கும் , இதற்குமுள்ள வித்தியாசம்..அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி சாப்பிடுகிறது ?களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்கிறது ? இப்பறவைகள் பறப்பதற்கு புறப்படும்போது தனது வாயிலே, சிறு குச்சி ஒன்றை கவ்விக் கொள்ளுமாம்.
எப்பொழுது அவற்றிற்குப் பசி ஏற்படுகிறதோ ? எப்பொழுது களைப்பு ஏற்படுகிறதோ ? அப்பொழுது இப்பறவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வருகிறது. வாயிலே கவ்வியுள்ள குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொள்கிறது.
அதிலே நின்றுக்கொண்டே தான் பார்ன் சுவாலோ (Barn Swallow )மீனினங்களை சாப்பிடுகிறது ; ஓய்வெடுத்தும் கொள்கின்றது. அது முடிய மீண்டும் பார்ன் சுவாலோ தன் பயணத்தை ஆரம்பிக்கிறது. ஐந்தறிவுள்ள பார்ன் சுவாலோ (Barn Swallow ) பறவைக்கு ஒரு சிறு குச்சி தான் நம்பிக்கையின் ஊன்றுக்கோல்.
எப்படி மிகச்சிறிய பறவையான பார்ன் சுவாலோ (Barn Swallow ) தன் இலக்கை மிக நம்பிக்கையோடும் , உறுதியோடும் ஒரு சிறு குச்சியை கொண்டு கடந்து செல்கின்றமை நமக்கெல்லாம் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றது.
ஆனால் ஆறறிவுள்ள நமக்கு எத்தனை ஊன்றுக்கோலிருக்கும் ? நமக்கான ஊன்றுக்கோலை , பல நேரங்களில் நாம் கண்டுக்கொள்ள தவறி விடுகிறோம் என்பதும் , பல விடயங்களில் தடுமாறி விடுகிறோம் என்பதும் தான் உண்மை.