இலங்கையில் இருந்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் சென்ற தமிழ் குடும்பத்தின் போராட்ட நிலை குறித்து பிரான்ஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரிய சசி – அருணா தம்பதிகள் தொடர்பிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சசி – அருணா குடும்பத்தினர் பிரான்ஸின் கிழக்கு நகரான ரியூனியனுக்கு (Réunion) படகு மூலம் சென்றடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அக் குடும்பத்தின் கடைசி மகள் அகதி அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில், அவர் உயர்நிலை கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மகன் கைவினைத் தொழிலில் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். குடும்ப தலைவரான சசி சாரதியாக செயற்பட்டுள்ளார். தற்போது சசி பிரெஞ்சு மொழியை தீவிரமாக கற்று வருகின்றார்.
மனைவி அருணா வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து வருகின்றார். இந்நிலையில் சென்சிலுவை சங்கத்தினர் மற்றும் பிரான்ஸ் மக்கள் இந்த குடும்பத்தினருக்கு பல்வேறு நெருக்கடியின் போது உதவி வருவதாகவும், பலர் தங்களை ஊக்கப்படுத்தியுள்ளதாகவும் சசி குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தொழில் ரீதியாகவும், அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு சட்டரீதியான உதவிகள் பெறுவதற்கும் பிரான்ஸ் மக்கள் இந்த குடும்பத்தினருக்கு உதவியுள்ளனர். சசி 2018ஆம் ஆண்டு, அவர் தனது மற்றும் குடும்பத்தின் உயிருக்கு பயந்து தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டு சசி – அருணா குடும்பத்தினர் உட்பட 50 இலங்கை புகலிட கோரிக்கையாளர் ரீயூனியன் தீவிற்கு வருகைத்தந்துள்ளனர்.
ஒரு சிறந்த வாழ்க்கை நிலையை எதிர்பார்த்து குறித்த இலங்கையர்கள் வருகைத்தந்துள்ள போதும் அவர்களில் பலர் நீண்ட காலம் அகதி அந்தஸ்த்து பெற போராட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சசி – அருணா குடும்பத்தினர் 12 முறை தங்கள் தங்கியிருந்த வீடுகளை மாற்றியுள்ளனர்.
அகதி அந்தஸ்த்து பெற்ற குடும்பத்தை நிலையாக நடத்தி செல்வது இன்னமும் சிக்கலாகவே உள்ளதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பிரான்ஸ் நாட்டில் இந்த குடும்பத்தினர் தொடர்ந்து தங்குவதற்கான ஒப்பந்தத்தை வெளியிடும் அமைப்பான ஒப்ராவிடமிருந்து அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.