நாட்டிற்கு லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்தால் இறக்குமதி செய்யபட்ட எரிவாயு கப்பலில் இருந்த எரிவாயுவானது தரமற்றது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், எரிவாயுவில் விசேட துர்நாற்றம் வீசுவதற்கென சேர்க்கப்படும் “எத்தில் மெர்காப்டானில்” இரசாயனம் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த எரிவாயுவில் 29% புரொப்பேன் மற்றும் 69% பியூட்டேன் இருப்பதாகவும் கண்டறியபட்டுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பல எரிவாயு கலன்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.