சிங்கராஜா வனத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“அளத் இள்ளும” பகுதியில் ஏலக்காய் பறிக்க சென்ற இரண்டு பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் 39 மற்றும் 40 வயதுடைய இத்தேகந்த தெபரான் சைட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு பெண்களும் கடந்த 12 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன பெண்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன பெண்களை தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அப்பகுதி மக்களின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.