நாய் கடித்து மயங்கிய குரங்கு ஒன்றுக்கு ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து உயிர் பிழைக்க வைத்த காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம் ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு.
ஓட்டுநராக வேலைபார்த்து வரும் இவர், கடந்த 9ஆம் திகதி குரங்கு ஒன்று தெரு நாய்களிடம் துரத்தி கடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழேவிழுந்துகிடப்தைஅவதானித்துள்ளார்.
அவர் உடனே குரங்குக்கு தண்ணீர்கொடுத்துள்ளார். எனினும் குரங்கு மயக்கத்தில் இருந்த நிலையில் குரங்கு தண்ணீர் குடிக்கவில்லை. இதையடுத்து உடனடியாக அவர் குரங்கின் வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்காற்று செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இதனை அடுத்து அந்த குரங்கு துள்ளி குதித்து எழுந்தது. பிறகு அந்த குரங்கை மீட்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளார் அந்த கருணை மிக்க மனிதர்.
இந்நிலையில் சாதாரண குரங்குதானே என்று பாராமல், குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை வழங்கி, குரங்கை காப்பாற்றிய ஓட்டுநர் பிரபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.