கொழும்பின் பல பகுதிகளில் இன்று (11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
அம்பத்தளையில் இருந்து கொழும்பு வரையிலான நீர்க் குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று (10) முதல் மினசாரத் தேவை அதிகமுள்ள காலங்களில் வழமை போன்று தடையின்றி மின்சார விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று முதல் தடையின்றி மின்சார விநியோகிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.