தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதல்முறையாக புதன்கிழமை 7 ஆயிரத்தைக் கடந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது : கடந்த 24 மணி நேரத்தில் 7,175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். அந்த எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல்முறையாகும். இத்துடன் நாட்டில் 489,484 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 63 போ் அந்த நோய்க்கு பலியாகினா். இதை அடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 4,020 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.