நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதிவு செய்யப்பட்ட வெளிநாடு பணியாளர்களின் எண்ணிக்கை 100000 கடந்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு வருடமும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இருப்பினும் கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 53,000 ஆக குறைவடைந்திருந்தது. இதற்கு காரணமாக கொரோனா பரவல் கூறப்படுகிறது.