வங்க தேசத்தை உலுக்கிய வங்க தேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET) மாணவர் அப்ரார் பஹத் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
டாக்கா விரைவு நீதிமன்றம் 1-ன் நீதிபதி Abu Zafar Md Kamaruzzaman புதன்கிழமை இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கினார்.
அப்ரார் பஹத் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேரில், 20 பேருக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு வழ்நாள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீரப்பளித்தார்.
2019 அக்டோபர் 7ம் திகதி BUET-ல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் அப்ரார், பல்கலைக்கழகத்தின் Sher-e-Bangla ஹாலில் சில BCL ஆர்வலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அக்டோபர் 7ம் திகதியே அப்ராரின் தந்தை Barkat Ullah, சவ்க்பஜார் காவல் நிலையத்தில் BUET BCL தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது புகார் அளித்தார்.
இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது, கொல்லப்பட்ட அப்ராருக்கு நீதி கேட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
சமூக வலைதளங்களிலும் பலர் அப்ராருக்கு நீதி கேட்டு பரப்புரை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு பின்னர் அப்ராரின் தந்தையின் கோரிக்கையை ஏற்று விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
2019 நவம்பர் 13 ஆம் திகதி, துப்பறியும் பிரிவு இன்ஸ்பெக்டர் Md Wahiduzaman, குற்றம் சாட்டப்பட்ட 25 பேருக்கு எதிராக தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தார்.
2020 செப்டம்பர் 15 அன்று தீர்ப்பாயம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 60 சாட்சிகளில் 46 சாட்சிகளின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்தது.
முன்னதாக, டாக்கா தீர்ப்பாயம் 2021 நவம்பர் 28 ஆம் திகதி தீர்ப்பை வழங்குவதாக இருந்தது. ஆனால் பின்னர், அது 2021 டிசம்பர் 8 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 20 பேருக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு வழ்நாள் சிறை தண்டனையும் வழங்கி டாக்கா விரைவு நீதிமன்றம் 1-ன் நீதிபதி Abu Zafar Md Kamaruzzaman தீரப்பளித்தார்.
அப்ரார் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேரில் மூவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.