யாழில் தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் இருவர் ஒரு கோடி ரூபாய் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான பரிசில் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இதில் மஹஜன சம்பத சீட்டிழுப்பில் ஒருவருக்கு ஒரு கோடியே 82 இலட்சம் ரூபாவும், மெகா பவர் வெற்றிச் சீட்டிழுப்பில் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவும் கிடைத்துள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பனை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர், பிராந்திய முகாமையாளர், அதிஸ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.