கனடாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி குறித்த இளைஞர் கனட செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான இளைஞர் போலி ஆவணங்களூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக டுபாய் சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் கைதானவரிடம் மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

