உலக சுகாதார நிறுவனம் புதிதாக உருவாகியுள்ள கொரோனாவிற்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டது. இதன் காரணமாக தொழில் அதிபர் ஒருவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு நினைத்துக் கூட பார்த்திருக்காது.
தற்போதைய சூழலில் உலக சுகாதார அமைப்பு தொற்றுக்கான தீர்வினை காண மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சைபீரிய நாட்டின் தொழில் அதிபர் ஒருவர் தனது நிறுவனத்தின் மீது உலக சுகாதார அமைப்பு களங்கத்தை ஏற்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளது.
Omicron Network of ophthalmology clinics என்ற மருத்துவமனையின் CEO, உலக சுகாதார அமைப்புக்கு எதிராக வழக்குத் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
புதிய கோவிட் மாறுபாட்டிற்கு தனது கிளினிக்கின் பெயரை சூட்டியுள்ளதால், தனது வணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் படார் குற்றம் சாட்டியுள்ளார்.