பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தைப் பொங்கல் நாளை தமிழர் பாரம்பரிய நாளாக பிரித்தானியா ஏற்றுக் கொண்டுள்ளது .
லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இந்த தீர்மானம் ஏகமனதாக, நிறைவேற்றப்பட்டது. அதோடு தைப் பொங்கல் நாளை தமிழர் மரபு நாளாக அரசாங்கம் கொண்டாட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பெரு நகர அவையில் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நபர்கள் பேசுகையில், தமிழர்கள் பிரித்தானியாவுக்கு செய்துள்ள சேவைகளை பாராட்டிப் பேசியுள்ளார்கள்.
அஸ்ரா செனிக்கா மருந்து கண்டு பிடிப்பது முதல் கொண்டு, சகல துறைகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தமிழர்களை பெருமிதப் படுத்தி உள்ளார்கள், பெரு நகர அவை அங்கத்தவர்கள்.
இந்நிலையில் வரலாற்றில் முதல் தடவையாக தைப் பொங்கல் நாளை தமிழர் பாரம்பரிய நாளாக பிரித்தானியா ஏற்றுக் கொண்டுள்ளமையானது பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.