நாடு முழுவதும் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னரும் இதுபோன்று நாட்டில் சில பாகங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.