நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் தலையில் ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில் அச்சத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய தற்போது பாதுகாப்பு கருதி சமைக்கையில் பெண்கள் தலைக்கவசம் அணிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஹெல்மெட் பயன்படுத்திய நிலையில் சமையலில் ஈடுபடும் பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.