இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பைசர் தடுப்பூசியின் மிகப் பெரிய தொகை இன்று (02) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி, 1,503,450 டோஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி தொகை நாரஹேன்பிட்ட தேசிய இரத்தமாற்ற மத்திய நிலையத்திற்கு சேமிப்பிற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.