டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனுக்கு உதவிய பெண் ஒருவர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய பெண் தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரனான ´மிடிகம நந்துன்´ அல்லது ´ஹரக் கட்டா´ என்பவருக்கே இவ்வாறு உதவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் 2020 ஆம் ஆண்டு 5 மாதங்களுக்குள் 720 கிலோ ஹெரோயின், 240 கிலோ ஐஸ் மற்றும் 20 நவீன 9 மி.மீ கைத்துப்பாக்கிகளை வௌிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2.8 மில்லியன் ரூபா பணம் மற்றும் 26 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.