யாழ்ப்பாணம் சரவணை ஊர்காவற்றுறை பிரதான வீதியும் புளியங்கூடல் தெற்கு வீதியும் கடந்த பல மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.
இந்த நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் வெள்ள நீர் தேங்கின்று சகதியாக காணப்படுகின்றதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வீதி அதிகார சபையினதும் ஒப்பந்த நிறுவனத்தினதும் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியூடாக செல்லும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதோடு அந்த சகதியில் சப்பாத்தை கையில் எடுத்துக்கொண்டு பாடசாலை மாணவர்கள் நடந்தே சென்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.