பாதாள உலகக்குழு உறுப்பினரான தெமடகொட ருவானுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் பணம் தெமடகொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக வைப்பிலிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பணம் குறித்த விவரம் வெளியிடப்படாததால், அந்தக் கணக்குகள் மூலம் பணப் புழக்கம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்களிடமிருந்த 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய பெட்டகமும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவருக்குச் சொந்தமான மேலும் இரண்டு பெட்டகங்கள் இன்று (19) சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெமடகொட ருவானின் பணம் மற்றும் தங்கப் பொருட்கள் தொடர்பில் 53 நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் சோதனையிடப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெமடகொட ருவான் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமடகொட சமிந்தவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.