யாழ்.மாவட்டத்தில் அமைதியான முறையில் தீபாவளியை மக்கள் கொண்டாடியுள்ளதுடன் ஆலயங்களில் காலையில் மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருக்கினர்.
தீபாவளி பண்டிகை இன்று உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கைவாழ் மக்களும் தீபாவளி நாளான இன்று கோவில்களிற்கு சென்று தீபாவளியை கொண்டாடினர். அதன்படி புகழ் பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திலும் மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் வழக்கம்போல் வெடி ஓசைகள், கொண்டாட்டங்கள் இல்லாத அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.