தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியியளாலரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த அதிகார சபையின் தரவு தளத்தை பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியளாலரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.