மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படும் என்று தற்போது சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கண்டியில் நேற்று (10) ஊடகங்களுக்கு இதுதொடர்பாக தெரிவிக்கையில், இதன்படி மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரயில் சேவை ஆரம்பிக்ககூடியதாக இருக்கும் என்றார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக விசேட பஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.