2 வயது 3 வயது குழந்தைகளுக்கு கொரோனா உறுதி! இலங்கையில் 3 வயது மற்றும் 2 வயது குழந்தைகள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியாவில் 3 வயதான ஆண் குழந்தைக்கும் யாழில் 2 வயது 10 மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 151 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசி.ஆர் பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்போதே இரு குழந்தைகளுக்கும் தொற்று இருப்பது கண்டறிப்பட்டது.
மேலும், இலங்கையில் கொரோனா தொற்று தீவிரம் நாளுக்கு நாள் குறைவடைந்துவரும் நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனத்துடன் பார்த்துகொள்ள வேண்டும் என சுகாதார துறையினர் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.