நிலுவைத் தொகையை செலுத்த மின்சார பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) வாய்வழி கேள்விகளுக்கு பதில் வழங்கிய போது எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
“இந்த இரண்டு மாதங்களுக்கு நிலுவையில் உள்ள 44 பில்லியன் ரூபாவை நாங்கள் அறவிட வேண்டியுள்ளது. எனினும், நிலுவை தொகையை செலுத்தவுள்ள பாவனையாளர்கள் அதனை 12 மாதங்களில் செலுத்த வாய்ப்பளித்துள்ளோம். ஆனால் அந்த மாதத்திற்கான கட்டணத்துடன் அதனை செலுத்த வேண்டும் என்றார்.