நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வீதிச் சோதனையின்போது 188 பேர் மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக கைதாகியிருக்கின்றனர்.
நேற்று இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை நடத்தப்பட்ட வீதிச் சோதனையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது