கொவிட் தொற்றுநோயின் மிக மோசமான கட்டம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
மேலும், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆராய்ச்சியாளர்களின் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி, தொற்றுநோயின் மோசமான கட்டம் முடிந்துவிட்டதாகக் கூறலாம் என்பதாக பேராசிரியர் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்பது வெவ்வேறு கணித மாதிரிகளை இணைத்து அடுத்த ஆறு மாதங்களில் தொற்றுநோயின் நிலையை திட்டமிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் முடிவுகளை செப்டம்பர் 22 ஆம் திகதி இணையத்தினூடாக வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த பென்சில்வேனியாவைச் சேர்ந்த உயிரியலாளர் பேராசிரியர் கெத்ரியானா ஷியா, தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்வதனால் அனைவருக்கும் தொற்றுநோயை முடிவுக்கு கொணடுவர வழிவகுக்கும் என்று கூறினார்.
“தனிப்பட்ட முறையில், நீங்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்படும் ஆபத்து கணிசமாகக் குறைந்துவிடும்” என, தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மக்களின் பொறுப்பை அவர் சுட்டிக்காட்டினார்.