ஆப்பிரிக்காவில் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இதுவரை சுமார் 20 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் திகழ்கிறது. நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத அமைப்பினர்கள் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை மட்டும் குறிவைத்து ஆயுதத்தை காட்டி மிரட்டி கடத்தி செல்கின்றனர்.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர். இதனால் 10 லட்சம் குழந்தைகள் தங்களது படிப்பை பாதியிலே நிறுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் 2021ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள பள்ளிகளில் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தி 1400 அப்பாவி குழந்தைகளை கடத்தியுள்ளதாக யுனிசெப் பகிரங்க தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.