சீனாவில் மேலும் ஒரு நகரில் டெல்டா வகை கொரோனா அலை எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 59 பேரும், கிழக்குக் கடலோர நகரமான ஃபுஜியானைச் சோ்ந்தவா்கள்.
ஏற்கெனவே, துறைமுக நகரான ஜியாமெனில் கடந்த 2 நாள்களில் மட்டும் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புடியான் நகரில் மேலும் 59 பேரிடம் அந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சீனாவில் கொரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனாவால் அங்கு தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.