“நாடே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (20) மேலும் 859 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 858 சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 432 கிராம் ஹெரோயின், 499 கிராம் ஐஸ், 110 கிராம் கொக்கேய்ன் மற்றும் 665 கிராம் கஞ்சா என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நேற்று (20) 26,227 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 432 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆகும்.
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 121 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 224 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகளும், ஆபத்தாக வாகனம் செலுத்திய 75 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

