சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வையிலும் வழிகாட்டலிலும் சந்தேகநபர் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

