யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த 32 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

