இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் 167,401 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை
ஆண்டின் தொடக்கமான ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 9.7% மற்றும் 16.2% என்ற வலுவான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஜூலை மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
இந்தக் காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 38,785 பேர் வருகை தந்துள்ளனர். அத்துடன், ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் 332,468 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
மாதாந்த செயற்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் மீளெழுச்சி பெற்று வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

