இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின. எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே இடத்தில் வந்து கிடக்கும் ஆனால், அதற்குப் பதிலாக வேறு உள்ளாடைகள் மாயமாகியிருக்கும்.
இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொறுமை இழந்த குடியிருப்பாளர்கள், குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்தனர்
என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை
அதன்படி, ஆடைகள் உலர்த்தப்படும் இடங்களை நோக்கியவாறு, கடந்த 1-ஆம் திகதி இரகசியக் கண்காணிப்பு கமராக்களை (CCTV) பொருத்தினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அந்த மர்மநபர், கடந்த 2-ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார்.
மிக இயல்பாக பால்கனிக்குச் சென்ற அவர், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடையைத் திருடி, அங்கேயே அணிந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபரின் இந்த அருவருக்கத்தக்க செயல் கமராவில் துல்லியமாகப் பதிவானது. உடனடியாக இது குறித்து இந்திரா நகர் பொலிஸில் புகார் அளித்து, ஆதாரமான வீடியோவையும் ஒப்படைத்தனர். வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவருக்குப் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து கொள்ளும் வினோதப் பழக்கம் (Fetish) இருப்பது தெரியவந்தது
“இந்த விபரீத பழக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; அதனால்தான் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடினேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை அப்பகுதி பெண்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

