ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
அதே வேளையில் இம்மாதத்தில் தான் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இதனால் சனிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான உறவால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. இந்த சிறப்பு பார்வை ஆகஸ்ட் 2 வரை நீடித்திருக்கும். இப்போது செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
சனியின் மூன்றாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
கும்பம்
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் கும்ப ராசிக்காரர்கள் ஆகஸ்ட் வரை தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபத்தை அள்ளித் தருவதாக இருக்கும்.

