சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை குறைபாடுகள் தொடர்பில் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்டு முதலமைச்சர் விஜயிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்த நிலையில் , முதலமைச்சர் விஜய் அங்கு திடீர் விசிஎ செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றதுடன் , வார்டில் இருந்த தாய்மார்களிடம் நலம் விசாரித்தார்.
மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை
அதோடு பிறந்த குழந்தைகளையும் முதலமைச்சர் விஜய் , கையில் ஏந்தி மகிழ்ந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் விஜயத்தில், முதலமைச்சர் விஜய்யுடன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துணை கண்காணிப்பாளர்கள் என பலரும் உடன் இருந்தனர். அப்போது அங்கே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சில பெண்களிடமும் அவர் உரையாடினார்.
அவர்களுக்கான வசதிகள் எப்படி இருக்கிறது? குறைகள் ஏதேனும் இருக்கிறதா? என கேட்டறிந்தார். மருத்துவமனையில் பல பிரிவுகளுக்கும் சென்ற முதல்வர் விஜய் அங்கிருந்து தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பொது மக்களுக்கு தரமான மருத்துவம், பாதுகாப்பு மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் கொடுக்கப்பட வேண்டும் என அங்கிருந்த மருத்துவர்களிடமும், அமைச்சர் அருண்ராஜிடமும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
இதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

