இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் முழு நாட்டையுமே நிலைகுலைய வைத்துள்ளது.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
நான்கு பேரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
, கடந்த ஜூன் 18-ஆம் திகதி, வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறிய சிறுமியை, ஓட்டுநர் கடத்திச் சென்று ஹோட்டல் ஒன்றில் விற்றுள்ளார். 5 நாட்களாக நான்கு வெவ்வேறு ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி மதுபானம் புகட்டப்பட்டு, 32 நபர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நேர்ந்த இக்கொடூரத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் அவர்களில் நான்கு பேரை அடித்துக் கொன்றனர். மீதமுள்ள 18 பேரைக் கயிறுகளால் கட்டி, பொதுமக்களும் பொலிஸாரும் பிரதான சாலையில் வைத்து அடித்தனர்.
இந் நிலையில் ராஜஸ்தானில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் காணொளிகள் முற்றிலும் தவறானவை என ஸ்ரீ கங்காநகர் பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளார்.
13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான வழக்கு தொடர்பில் பல்வேறு முரணான தகவல்கள் தற்போது கசிந்து வருவதாகவும் அவை முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவறான தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம்
இத்தகைய தவறான தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸார், வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி இறந்துவிட்டதாக புதன்கிழமை (8) காலை சமூக ஊடகங்களில் காணொளி பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
உணர்வு ரீதியில் தாக்கம் செலுத்தக்கூடிய, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக வெளியாகி வரும் காணொளிகள் குறித்து ஸ்ரீ கங்காநகர் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான சரிபார்க்கப்படாத, போலி அல்லது தவறான வீடியோக்கள் எதையும் மற்றவர்களுக்கு அனுப்பவோ சமூக ஊடக வெளியில் பகிரவோ வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

