சமூக வலைதளங்களில் பிரபலமான இந்திய பெண் ஒருவர், வெளி நாட்டில் டவலுடன் ஆட்டம் போடும் காணொளி சமூகவலைத்தளங்க்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் சமீபத்தில் சுற்றுலா பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற இரவு நேர சந்தைக்கு சென்ற அவர், சாலையின் நடுவே உடலில் ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு நடனமாடியுள்ளார்.
லைக்ஸ் வாங்குவதற்காக இப்படியா எல்லை மீறுவது….
அந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அது இணையத்தில் வைரலானது. கடந்த மே மாதம் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, சமீபத்தில் பலரது கவனத்தை ஈர்த்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “லைக்ஸ் வாங்குவதற்காக இப்படியா எல்லை மீறுவது?”, “இதுபோன்ற செயல்களால் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது” என தங்களது கடுமையான அதிருப்தியை பதிவு செய்தனர்.
விமர்சனங்கள் வலுத்ததையடுத்து, அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளை வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அந்தந்த நாடுகளின் சட்டங்களையும் கலாசாரத்தையும் மதித்து, பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது

