தென் மாகாண முன்னாள் அமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீண்டகால விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்ட்டுள்ளார்.
ஊழல் மோசடி
தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ. 1.65 மில்லியனுக்கு அதிகமான நாற்காலிகளை வாங்கிய மோசடி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டடில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

