ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பு நிறுவனம் (IRIB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு ஈரானிய நகரமான சிரிக் அருகே உள்ள பமானி மாவட்டத்தில் அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதனால் அந்தப் பகுதி முழுவதற்குமான குடிநீர் விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளான குஹெஸ்டாக், சிரிக் மற்றும் மினாப் உள்ளிட்ட இடங்களில் பல பயங்கர வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலங்குவானூர்தி தாக்குதலுக்கு பதிலடி
தாக்குதல்களைத் தொடர்ந்து மாகாணத்தின் சில பகுதிகளில் ஈரானிய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க அப்பாச்சி ரக உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராக தற்காப்புத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

