🕯️ மன்னார் படுகொலை – 04.12.1984 🕯️
1984 டிசம்பர் 4…
தமிழர் வரலாற்றில் இரத்தத்தில் எழுதப்பட்ட
மற்றொரு கரும்பதிப்பு நாள்.
இலங்கையின் வடக்கே அமைந்துள்ள
மன்னார் நகரிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும்
இலங்கை இராணுவத்தினரால்
107 முதல் 150 வரையிலான
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மூன்று இராணுவ வாகனங்கள்
கண்ணிவெடியில் சிக்கி
ஒரு இராணுவத்தினர் உயிரிழந்ததற்குப்
பழிவாங்கும் நடவடிக்கையாக
இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
🕯️
மன்னார் மத்திய மருத்துவமனை…
அஞ்சலகம்…
கத்தோலிக்க திருச்சபை மடம்…
நெல் வயல்களில் உழைத்துக் கொண்டிருந்த விவசாயிகள்…
பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள்…
எவரும் இரக்கமின்றி தாக்கப்பட்டனர்.
🕯️
மன்னார் நகரைச் சுற்றியுள்ள
முருங்கன், பரப்பன்கடல் உள்ளிட்ட கிராமங்களிலும்
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக
அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவால்
ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஆனால்…
உண்மையை வெளிப்படுத்த முயன்றவர்களும்
பாதுகாப்பாக இருக்கவில்லை.
இவ்வாணைக்குழுவில் உறுப்பினராக இருந்த
கத்தோலிக்க மதகுரு
மேரி பஸ்டியான் அவர்கள்
1985 ஜனவரியில் கொலை செய்யப்பட்டார்.
மேலும்,
இப்படுகொலைகளுக்கு சாட்சியமளித்த
மெதடிஸ்த மதபரப்புனர்
ஜோர்ஜ் ஜெயராஜசிங்கமும்
1984 டிசம்பரில் கொலை செய்யப்பட்டார்.
🌺
மன்னார் படுகொலையில் உயிரிழந்த
அனைத்து அப்பாவி உறவுகளுக்கும்
எமது ஆழ்ந்த அஞ்சலிகள்.
🌺
“மறக்க மாட்டோம்…
மௌனமாகவும் இருக்க மாட்டோம்…”
🕯️
நீதிக்காக உயிர் தந்தவர்களையும்,
உண்மைக்காக குரல் கொடுத்தவர்களையும்
வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்.
🕯️

