ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 லட்சத்து ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய 9 ஆயிரத்து 60 போதை மாத்திரைகள் சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏழாலையைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.