கொழும்பு துறைமுகத்திலுள்ள தடடுத்துவைக்கப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்று விநியோகிக்கப்படும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 அரிசி கொள்கலன்களை விடுவிப்பதற்காகவே டொலர் விநியோகிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சு, தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். கடந்த காலத்தில் கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில் துறைமுகத்திற்கு செலுத்தவேண்டிய கட்டண தொகையைக் குறைக்க முறையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.