ஐரோப்பிய நாடானா ஐஸ்லாந்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட துருவக் கரடி உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல் அளித்த காரணத்தால் பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுற்றுச்சூழல் முகமை அதிகாரிகளுடன் கலந்து பேசிய பிறகு பொலிஸார் இதனை செய்துள்ளனர். அந்த பகுதியில் வசித்த மக்களுக்கு துருவக் கரடி அச்சுறுத்தல் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
“பொதுவாக நாங்கள் இப்படி செய்வதில்லை. அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. அந்த பகுதியில் தனியாக இருந்த வயதான பெண்மணி ஒருவரை துருவக் கரடி அச்சுறுத்தி உள்ளது. அதையடுத்து அவர் வீட்டின் மேல் பகுதிக்குச் சென்று பூட்டிக் கொண்டுள்ளார்.
பின்னர் போன் மூலம் விவரத்தை தன் மகளிடம் தெரிவித்துள்ளார். உதவியும் நாடியுள்ளார். அதன் பிறகு இப்படி செய்ய வேண்டி இருந்தது” என காவல் துறை அதிகாரி ஹெல்கி ஜென்சன் தெரிவித்துள்ளார்
துருவக் கரடிகள் ஐஸ்லாந்தில் அதிகம் தென்படுவதில்லை. கிரீன்லாந்தில் இருந்து பனி பாறைகள் அடித்து வரப்படும் போது துருவக் கரடிகளும் வருவதுண்டு.
2016-க்கு பிறகு ஐஸ்லாந்தில் முதல் முறையாக இப்போது தான் துருவக் கரடி தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுட்டு கொல்லப்பட்ட துருவக் கரடி சுமார் 150 முதல் 200 கிலோ வரை எடை கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வுக்காக அதன் உடல் ஐஸ்லாந்திய இயற்கை வரலாற்று நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அதன் தோல் மற்றும் எலும்புகள் சேகரித்து வைக்கப்பட உள்ளது.