கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தொன்றும் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பகல் இரண்டு மணியளவில் கினிகத்தேனை பேரகஹமுல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து பேரகஹமுல்ல பகுதியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த வேளையே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் சாரதி கவனக்குறைவாக செலுத்தியுள்ளமையே இந்த விபத்துக்கு காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்ததுடன் சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.